Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
16 தொகுதியில் போட்டியிடும் காங்.வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. பிரசாரமும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கும் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. வேட்பாளர்கள் தொடர்பாக சென்னையில் காங்கிரஸ் தேர்தல் பணி குழு ஆலோசனை நடத்தி முதல் கட்ட பட்டியலை தயார் செய்தது.
இதையடுத்து டெல்லியில் மேலிட பார்வையாளர்கள் குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். இறுதி பட்டியல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அந்த பட்டியல் திருப்தி அளிக்காததால், சோனியா காந்தி நிராகரித்துவிட்டார். இதையடுத்து தகுதி, திறமை அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய தலைவர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதத்தில் வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாக, காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன. சோனியா காந்தியின் பார்வைக்காக பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது சோனியா வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். முதல் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இன்று மாலை அவர் டெல்லி திரும்புகிறார்.
இன்று இரவு சோனியா காந்தி, தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை ஆய்வு செய்கிறார். அதன் பிறகு அவரது ஒப்புதலுடன் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல் அவருக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நாளை காலை வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகும். திருத்தம் இருந்தால் நாளை இரவு பட்டியல் வெளியிடப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இன்று நிருபர்களிடம், “நாளை எந்த நேரத்திலும் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம்” என்று தெரிவித்தார்.
மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர அய்யர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய மந்திரி பிரபு, ஆரூண் எம்.பி. ஆகியோருக்கு தொகுதிகள் முடிவாகி விட்டன. புதிய வேட்பாளர்களை தேர்வு செய்வதில்தான் சிக்கல் உள்ளது.
பிரச்சினை இல்லாமல் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியது இருப்பதால்தான் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காங்கிரசில் பல கோஷ்டிகள் இருப்பதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் உள்ளது. வேட்பாளர்களை அறிவித்தாலும் அதன் பிறகு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.