Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

அண்மை செய்திகள்

அமைச்சரவை கூட்டம்: லாலு, பாஸ்வான் புறக்கணிக்க முடிவு



புதுடில்லியில் இன்று(08ம் தேதி) மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தை ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் மற்றும் லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓட்டுப்பதிவுக்கு இரண்டு நாள் இருந்தபோது ராகுல், பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை புகழ்ந்து பேசியது, லாலுவுக்கு, பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

பீகார் வாக்காளர்களுக்கு ராகுல் சொன்னது, நிதிஷ் குமாருக்கு ஓட்டுக்களை அள்ளித்தரும் என்று லாலு பெரும் டென்ஷனில் உள்ளார்.ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் அவர் தொடர்ந்து கவலையில் மூழ்கி உள்ளார். யாரையும் அவர் சந்திக்கவில்லை. டில்லியில் உள்ள காங்., தலைவர்களுடனும் பேசவில்லை. கட்சி தலைவர்கள் அவரை பார்க்கவே பயப்படுகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை டில்லியில் நடைபெற உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சரவை கூட்டத்தை லாலுவும், பாஸ்வானும் புறக்கணிக்க தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More     Comments (33)