Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
புவனேஸ்வரி பிடிபட்டதை தொடர்ந்து போலீசாரின் தீவிர கண்காணிப்பில் 4 நடிகைகள்




விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்யும் மேலும் நடிகைகளின் பெயர் பட்டியலை போலீசாரிடம் கொடுத்துள்ளார். அவர்களில் முக்கியமான 4 பேரை போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.
பிரபல நடிகை பூனைக்கண் புவனேஸ்வரி நேற்று முன்தினம் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவருடைய வீட்டில் வைத்து மேலும் 2 அழகிகளோடு புவனேஸ்வரி போலீசாரிடம் சிக்கினார். புவனேஸ்வரியை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், விபசார தடுப்பு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சந்திரகாசன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதமாக கண்காணித்தனர். புவனேஸ்வரி வளசரவாக்கத்தில் குடியிருந்தார்.
போலீசை ஏமாற்றுவதற்காக சாஸ்திரி நகருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது குடியிருப்பை மாற்றினார். இருந்தாலும் போலீசார் அவரை கண்காணித்து பிடித்துவிட்டனர். போலீசார் வீட்டுக்குள் நுழைந்தபோது புவனேஸ்வரி நம்ப முடியாத அதிர்ச்சியில் ஆழ்ந்தார். அவரது வீடு ரூ.15 ஆயிரம் மாத வாடகைக்கு எடுக்கப்பட்ட ஆடம்பர வீடு ஆகும்.
அங்கு 4 ஏர்கண்டிசன் சொகுசு படுக்கை அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் எல்.சி.டி. டி.வி., பிரிட்ஜ் போன்றவைகள் உள்ளன. போலீசார் சென்றபோது புவனேஸ்வரியின் தாயாரும், மகனும் வீட்டில் கூடவே இருந்தனர். போலீசார் சென்றதை பார்த்து அவர்கள் எந்தவித அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ காட்டிக்கொள்ளவில்லை. புவனேஸ்வரியை பிடித்து சென்றபோதும் அவர்கள் சாதாரணமாக பார்த்துக்கொண்டே இருந்தனர்.
புவனேஸ்வரி, போலீசாரிடம் பிடிபட்டதில் இருந்தே சண்டைக்கோழி போல் நடந்து கொண்டார். அவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்றபோது ஏராளமான பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க சூழ்ந்துவிட்டனர். உடனே என்னை படம் பிடிக்க அனுமதித்தால் நிர்வாணமாக நிற்பேன் என்று மிரட்டினார். அதன்பிறகு போலீசார் அவரை முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கொள்ள அனுமதித்தனர்.
விபசாரத்தில் ஈடுபடும் 25 முக்கிய நடிகைகளின் பட்டியலை புவனேஸ்வரி, போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் என்னென்ன `ரேட்' என்பதையும், எங்கெங்கு வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.1 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்று `ரேட்' வாரியாக பட்டியலை கொடுத்துள்ளார்.
இவர்களில், அழகிகளை வைத்து விபசார தொழில் செய்யும் 4 முக்கிய நடிகைகளை போலீசார் தங்களுடைய முதல் வேட்டைக்கு எடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் ரூ.25 ஆயிரம் `ரேட்'டில் உள்ளவர்கள். நடிகைகளை பிடிப்பதற்கு டீக்கா பணத்தை போலீசார் தான் தயார் செய்ய வேண்டும். ரூ.25 ஆயிரம் அளவில் தான் தயார் செய்ய முடியும் என்பதால் முதல்கட்டமாக இந்த நடிகைகளை குறி வைத்துள்ளனர்.
இவர்களில் ஒரு நடிகை மலையாள பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டவர். தற்போது வாய்ப்பு இல்லாமல் சென்னையில் அழகிகளை வைத்து உல்லாச தொழில் செய்கிறார். இன்னும் 2 நடிகைகள் காதல் திருமணம் செய்துவிட்டு, தற்போது கணவர்களை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்கள். இன்னொரு `ச' நடிகை முக்கிய கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து தற்போது ஓரமாக உல்லாச தொழில் செய்கிறாராம். இவரையும் பிடிக்க போலீசார் துடிப்போடு உள்ளனர்.
ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.50 ஆயிரம் என்று வாங்கும் `ஹைடெக்' நடிகைகளை பிடிக்க டீக்கா பணத்தை தயார் செய்ய முடியாது என்பதால் அவர்களை பிடிப்பதில் தற்போது போலீசார் ஆர்வம் காட்டவில்லை. மேலும் அந்த நடிகைகள் அழகிகளை வைத்து விபசாரத்தை ஒரு தொழிலாக செய்யவில்லை. பொழுது போக்காக லட்சக்கணக்கில் வாங்கிக்கொண்டு உல்லாசம் கொடுக்கிறார்களாம். அவர்களை பிடித்தாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பட்டியலில் அரசு இல்லத்தில் தான் அடைக்க முடியும். கைது செய்து ஜெயிலுக்கு அனுப்ப முடியாது என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. எனவே, போலீஸ் குறிவைத்துள்ள 4 நடிகைகளில் யாராவது ஒருவர் விரைவில் சிக்கலாம்.
புவனேஸ்வரி விபசார வழக்கில் கைதான சம்பவம் சினிமா வட்டாரத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் விபசாரத்தில் ஈடுபடும் எல்லா நடிகைகளையும் பிடிக்க வேண்டும் என்று போலீசாரிடம் அவர் சண்டை போட்டது சினிமா வட்டாரத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. புவனேஸ்வரி யார் யார் பெயரை போலீசாரிடம் கொடுத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள சினிமா உலகத்தினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பல சினிமா பிரமுகர்கள் இதுபற்றி பத்திரிகை நிருபர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டவண்ணம் இருந்தனர்.