Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

ஹாட் நியூஸ்

ஜெயிலில் கஞ்சா கைதிகளோடு தரையில் படுத்து தூங்கிய நடிகை புவனேஸ்வரி





ஜெயிலில் கஞ்சா கைதிகளோடு நடிகை புவனேஸ்வரி தரையில் படுத்து தூங்கினார்.

சென்னை புழல் பெண்கள் ஜெயிலில் நடிகை புவனேஸ்வரி அடைக்கப்பட்டுள்ளார். 2002-ல் அவர் கைதானபோது சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் அவர் இருந்தார். அந்த ஜெயிலைவிட, புழல் பெண்கள் ஜெயில் நவீன வசதி வாய்ப்பு உள்ளது. புவனேஸ்வரி ரிமாண்ட் கைதிகளுக்கான பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் வகுப்பு கிடைக்கவில்லை. இதனால் மின் விசிறி, கட்டில் வசதி போன்றவை இல்லை. அவரோடு கஞ்சா மற்றும் கள்ளச்சாராய வழக்கில் கைதான 7 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரவு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டபோது, மற்ற பெண் கைதிகளுக்கு இவர் நடிகை என்று தெரியவில்லை. காலையில் ஜெயிலில் வழங்கப்படும் பத்திரிகையை பார்த்தபோது தான் நடிகை புவனேஸ்வரி என்று அடையாளம் தெரிந்து கொண்டனர். மற்ற கைதிகளிடம், `நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன், ஏன் இப்படி வாழ்கிறேன்' என்று புவனேஸ்வரி அழுதபடி கூறினாராம். மற்ற கைதிகள் அவருக்கு ஆறுதல் கூறினார்களாம்.

வீட்டில் ஏர்கண்டிசன் அறையில் சொகுசு கட்டிலில் படுத்து தூங்கிய புவனேஸ்வரி மற்ற கைதிகளோடு தரையில் படுத்து தூக்கமில்லாமல் துவண்டு போனாராம். போலீசார் மாறுவேடத்தில் கோவையில் நடன நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்று அழைத்தார்கள். அதற்காகத்தான் பணம் கொடுத்தார்கள். நடன நிகழ்ச்சி என்பதால் ஒத்துக்கொண்டு பணம் வாங்கினேன். உடனே என்னை விபசார வழக்கில் கைது செய்துவிட்டனர். போலீசார் என்னை ஏமாற்றி வலையில் சிக்க வைத்துவிட்டனர் என்று புவனேஸ்வரி அழுதுகொண்டே சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மற்ற கைதிகளோடு உட்கார்ந்து ஜெயில் சாப்பாட்டை சாப்பிட்டார். எனக்கு யாரும் விரோதிகள் இல்லை. ஏன் என்னை இப்படி மாட்டிவிட்டார்கள் என்பது தெரியவில்லை என்று அழுதபடியே புவனேஸ்வரி உள்ளார். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்காகவே நான் வாழ்கிறேன் என்றும் அவர் கூறினாராம்.

நேற்று புவனேஸ்வரியை அவரது வக்கீல் மட்டும் பார்த்து பேசினார். புவனேஸ்வரியை ஜாமீனில் வெளியில் கொண்டுவர உரிய ஏற்பாடு செய்வதாக வக்கீல் கூறிவிட்டு வந்துள்ளார்.

Read More     Comments (33)