Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
மாதவரத்தில் நிலத்தடி நீர் திருட்டு: வருவாய் துறை அதிரடி

மாதவரத்தில் நிலத்தடி நீர் திருட்டை தடுத்து நிறுத்தாவிட்டால், போராட் டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு செய்ததையடுத்து, வருவாய்த் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற் கொண்டனர். சென்னை அடுத்த மாதவரம், அம்பத்தூர், அல மாதி, சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை கால தண்ணீர் விற் பனையை பயன்படுத்தி, ஏராளமான அளவில் நிலத்தடி நீர் திருட்டு தொடர்கிறது.
மாதவரம் பால்பண்ணை மற்றும் மாத்தூர் சுற்றுவட்டாரங்களில் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து டேங்கர் லாரிகளை பிடித்து வருகின்றனர். ஆனாலும் நிலத்தடி நீர் கொள்ளை, மணல் கொள்ளை போல் கட்டுப்படுத்த முடியாத அளவில் தொடர் கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து, தங்களது அன் றாட பயன்பாட்டிற்கான குடிநீருக்காக பொதுமக்கள் அலைய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. விவசாய பயன்பாட்டிற் கென பெறப்படும் மின் இணைப்பு மற்றும் திருட்டு மின்சாரம் ஆகியவற்றின் மூலம் ராட்சத மோட்டார் அமைத்து நிலத்தடி நீரை திருடும் தொழில் மேற் கண்ட பகுதிகளில் கனஜோராக நடந்து வருகிறது.
குறைந்த செலவில் நீரை திருடி சென்னையில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங் கள், நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்கு மாடி வீடுகள் ஆகியவற்றுக்கு கணிசமான தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக அப்பகுதிகளில் டேங்கர் லாரிகளை ரிப்பேர் செய்யும் வெல்டிங் தொழிற் சாலைகளும் அதிகரித்துள்ளன. அவற்றுக்கும் திருட்டு மின்சாரம் பயன் படுத்தப்படுகிறது. இந்நிலையில், மாதவரம் பால்பண்ணை அஜீஸ் நகர் பகுதி மக்கள், நிலத்தடி நீர் திருட்டை தடுக்காவிட் டால், தேர்தலை புறக் கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
இத்தகவல் உளவுத் துறை போலீசாருக்கும், மாவட்ட கலெக்டர் சுந்தரமூர்த்திக்கும் கிடைத்தது. கலெக்டர் உத்தரவின் படி, பொன்னேரி ஆர்.டி.ஓ., சண்முகசுந்தரம், அம்பத்தூர் தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் ராஜூ உட்பட வருவாய்த் துறையினர் நேற்று மேற் கண்ட பகுதியில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். தண்ணீர் திருட்டு நடந்த ஐந்து இடங்களை கண் டறிந்து, மின் வாரிய அதிகாரிகள் உதவியுடன் முறைகேடான மின் இணைப்புகளை முதலில் துண்டித் தனர். பின், ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம், நிலத்தடி நீர் திருட்டுக்கு பயன்படுத்தப் பட்ட ராட்சத மோட்டார் களை அகற்றி, கிணறுகளின் சுற்றுச்சுவர்களையும் உடைத்து மூடினர். தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட கோவிந்தன், கங்காதேவி, சேகர், பக்தன் மற்றும் கமலம்மாள் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.