Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

அசின் மீது அடுத்தடுத்து வரும் குற்றச்சாட்டுகள்







நடிகை அசின் மீது ஏற்கனவே ஒரு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, இப்போது வலுக்கட்டாயமாக அசின் அழைத்துச் சென்ற வாலிபரை என்று புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட்டு, பாலிவுட் ரசிகர்களை பதம் பார்க்க மும்பை பக்கம் சென்றிருக்கிறார் அசின். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வர முடியாத அளவுக்கு அசினின் புகழ் இந்தியில் பரவிக் கிடக்கிறது. இந்நிலையில் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம், செங்குன்றத்தை சேர்ந்த சுடலை வடிவு என்பவர் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அசின் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் முத்துக்கருப்பன் இறந்துவிட்டார். அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசில் வேலை பார்த்தார். எங்களின் மகன் நல்லமுத்துக்குமார் (23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் விஜயிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தான். "போக்கிரி' திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது, நடிகை அசினுடன் எனது மகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறி, எனது மகனை உதவியாளர் வேலைக்கு அசின் வைத்துக் கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகை அசினிடம் எனது மகன் உதவியாளராக வேலை பார்த்து வந்தான்.

கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன், அசினுடன் படப்பிடிப்பு ஒன்றுக்கு சென்றான். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் எனது மகனின் இடதுகால் உடைந்தது. எனது மகனுக்கு மும்பையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த தகவலறிந்து, மும்பை சென்ற நான், அங்கு ஒன்றரை மாதம் தங்கியிருந்து, சிகிச்சை பெற்ற பின் அவனை சென்னைக்கு அழைத்து வந்தேன். இங்கு வந்த பின், அடிக்கடி எனது மகனை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நடிகை அசின், வேலைக்கு வரும்படி அழைத்தார். ஒரு கட்டத்தில் அந்த நடிகை அழைத்ததின்பேரில் எனது மகனும் மும்பை சென்றான். அங்கிருந்து என் மகன் தினமும் போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். ஒரு நாள் அப்படி பேசிய போது, "இங்கு எனக்கு வேலை பிடிக்கவில்லை. நடிகை அசின் கடுமையாக நடந்து கொள்கிறார். நொண்டி என்று அடிக்கடி திட்டுகிறார்' என்று புலம்பி னான்."வேலை பிடிக்காவிட்டால் உடனடியாக சென்னைக்கு திரும்பி வந்து விடு' என்று மகனிடம் கூறினேன்.

அதன் பின், எனது மகனிடம் இருந்து போன் வரவில்லை. நான் அவனை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. வேதனையடைந்த நான், எனது சகோதரியுடன் மும்பைக்கு சென்றேன்.அங்கு எனது மகன் தங்கியிருந்த அறையில் விசாரித்தபோது, "முத்துவை பார்த்து 10 நாட்களுக்கு மேலாகிறது' என்றனர்.பின், நடிகை அசினின் கார் டிரைவர் முருகன் என்பவருடன் தொடர்பு கொண்டு, அசின் வீட்டிற்கு சென்றேன். படப்பிடிப்பிற்கு சென்றதால், அவரை தொடர்ந்து பல நாட்கள் பார்க்க முடியவில்லை.

அதன் பிறகு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டேன்.அசினின் தந்தை ஜோசப் எடுத்து பேசியபோது, "உனது மகன் வேலையில் இருந்து நின்று விட்டான். அவனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டோம்' என்றார். இதே பதிலை நடிகை அசினும் கூறினார். இருப்பினும் நான் மும்பையில் தங்கி எனது மகனை தேடினேன்.இது தெரிந்ததும் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்த ஜோசப், ஒரு கடிதத்தை கொடுத்தார். பிறகு, எனது மகன் தாதா கும்பலில் சேர்ந்து விட்டான் என்று கூறினார். இதை மறுத்த நான், மும்பை போலீசாரிடம் புகார் கொடுக்கலாம் என்று கூறியதற்கு, "நீங்கள் சென்னை செல்லுங்கள்; உங்கள் மகனை தேடி பிடித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்' என்று ஜோசப் கூறினார்.அவர் கூறியபடி இன்றுவரை எனது மகனை பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. நடிகை அசின் மற்றும் அவரின் தந்தை ஜோசப்பை பல முறை தொடர்பு கொண்டும் மொபைல் போனை எடுப்பதில்லை.எனவே, நடிகை அசின், அவரது தந்தை ஜோசப் மீது நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு சுடலைவடிவு கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்கும்படி செங்குன்றம் போலீசாருக்கு கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த நரசம்மா என்பவர் தனது மகள் பிர்லாவை (22) நடிகை அசின் அடைத்து வைத்து கொடுமைப் படுத்துகிறார் என்று புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மும்பை சென்று விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் பிர்லா, தன்னை அசின் கொடுமைப் படுத்தவில்லை என்றும், அசினுடனேயே இருக்க விரும்புவதாகவும் கூறினார். இதையடுத்து அந்த வழக்கு முடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அசினுடன் சென்ற வாலிபர் ஒருவரை காணவில்லை என்று புகார் வந்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசின் மீது அடுத்தடுத்து வரும் இதுபோன்ற புகார்கள் தமிழ் திரையுலக பிரமுகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read More     Comments (33)