Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

பாராளுமன்ற தேர்தல்

ஈ.வி.கே.எஸ். வீட்டை முற்றுகையிட முயற்சி:28 பேர் கைது




இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக இயக்குநர் சீமான் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ’’தந்தை பெரியார், காங்கிரசை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால், அவரது பேரனோ காங்கிரசில் இருக்கிறார். அதனால் நான் தான் உண்மையான பேரன்’’ என்று பேசினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘’நான் தான் பெரியாரின் உண்மையான பேரன். ஆனால் சீமான் பெரியாரின் பேரன் என்று சொல்லியிருக்கிறார்.

பெரியார் இளம் வயதில் செய்த தவறு என்றுதான் நினைக்கிறேன்...அதனால்தான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார்’’என்று பேசினார்.

இது இளந்தமிழர் இயக்கத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவ்வியக்கத்தின் முக்கியஸ்தர் செந்தமிழன் ஈ.வி.கே.எஸ்., பெரியாரை கொச்சைப்படுத்தி விட்டதாகவும் அதனால் ஈ.வி.கே.எஸ். வீட்டை முற்றுகையிடப்போவதாகவும் அறிவித்தார்.

இதனால் இளந்தமிழர் இயக்கத்தினரை போலீசார் கைது செய்துவந்தனர். ஈ.வி.கே.எஸ். வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் இன்று இளந்தமிழர் இயக்கத்தினர் 18 பேர், 12 மணி அளவில் ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ். வீட்டை முற்றுகையிடுவதற்காக பன்னீர் செல்வம் பூங்காவில் இருந்து பேரணியாக சென்றனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அடுத்து, இளந்தமிழர் இயக்கத்தினர்10 பேர் பேரணியாக சென்றனர். அவர்களையும் கைது செய்தனர்.

அடுத்தும் 3 பெண்கள் உட்பட 20 பேர் பேரணியாக சென்றனர்.. போலீசார் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

இருப்பினும் இன்னும் ஈரோட்டில் பதட்டம் தணியவில்லை.

Read More     Comments (33)