Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

எஸ்.வி.சேகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு



--> ‌நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர்.நடிகரும், அ.தி.மு.க.,வின் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகர் தனது நாடகத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இரவு 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் அவரது வீட்டில் விஸ்கி பாட்டிலில் அடைக்கப்பட்ட பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர்.மூன்று வாலிபர்கள் ஒரே டூவீலரில் வந்துள்ளதை எதிர்வீட்டில் உள்ள காவலாளி பார்த்துள்ளார். இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More     Comments (33)