Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

சபாநாயகரிடம் அனுமதி கேட்கிறார் எஸ்.வி.சேகர்



சட்டசபையில் அதிமுக சார்பில் பேச வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஜனநாயக கடமையை ஆற்ற வினாவிடை நேரத்தில் துணைக் கேள்விகளை எழுப்ப அனுமதி அளிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் நடிகர் எஸ்.வி.சேகர். இவர் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் சட்டசபையில் அக் கட்சியின் சார்பில் மானிய கோரிக்கை கள் உள்ளிட்ட விவாதங்களில் பங்கேற்க அவருக்கு கட்சி சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் அவ்வப்போது கேள்வி நேரத்தில் துணைக்கேள்விகளை அவர் எழுப்பி வருகிறார்.

இந்நிலையில் அவர் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் , " சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு தான் சார்ந்த கட்சி சார்பில் மானிய கோரிக்கைகளிலோ அல்லது பொது விவாதங்களிலோ கலந்துகொள்ள வாய்ப்பளிக்காத/கிடைக்காத சூழ்நிலையில் தொகுதி மக்களின் குறைகளை அரசுக்கு எடுத்துச்செல்லக்கூடிய/சொல்லக் கூடிய ஒரே வழி கேள்விபதில் மூலமாகவோ, கவனஈர்ப்பு தீர்மானம் மூலமாகவோதான் செய்ய முடியும்.

ஆகவே என்னுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று கேள்வி நேரங்களில் துணைக்கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டுகிறேன்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More     Comments (33)