Welcome to South Indian Crime Point
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம் - அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் குடியரசு தின விழா













நாட்டின் 61-வது குடியரசு தின விழா, டெல்லியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நாட்டின் 61-வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகை மற்றும் இந்தியா கேட் இடையிலான `ராஜபாதை'யில் வண்ண மயமாக குடியரசு தின விழா நடந்தது. விழா தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், ராணுவ வீரர் நினைவிடமான `அமர் ஜவான் ஜோதி'யில் பிரதமர் மன்மோகன் சிங் மலரஞ்சலி செலுத்தினார்.
முப்படைகளின் தளபதிகளும் அப்போது அருகில் இருந்தனர். அதைத் தொடர்ந்து, குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தென்கொரிய அதிபர் லீ மியுங் பக் அழைக்கப்பட்டு இருந்தார். அவரை விழா நடைபெற்ற இடத்துக்கு காலை 8 மணி அளவில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் அழைத்து வந்தார். அப்போது ஜனாதிபதியின் மெய்க்காவல் படையை சேர்ந்த 46 குதிரைப்படை வீரர்களும் அணிவகுத்து வந்தனர்.
அதன் பிறகு, ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது ராணுவ இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். 21 குண்டுகள் முழங்கின. விழாவில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட பல்வேறு தலைவர்களும் முப்படைகளின் தளபதிகள் உட்பட பல்வேறு ராணுவ உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் குடியரசு தின விழா சிறப்புற கொண்டாடப்பட்டது. அபத்தூர் தாசில்தார் ராமசந்திரன் தேசியகொடியேற்றினார்.
அலுவலக ஊழியர்கள் அனைவரும் தேசியகொடிக்கு மரியாதை செய்தனர்.